Various types of Kolukattai, made from Ganesh Chaturthi today : informed by Aswins Founder Chairman K.R.V Ganesan

விநாயகப் பெருமான் அனைத்துக்கும் முதலானவர் எந்த தெய்வத்தை வேண்டினாலும் விநாயகரே துவக்கம், அவருக்கான விநாயக சதுர்த்தி தினத்தன்று நாம் அவரை முழுமனதுடன் வேண்டினால் நமது எண்ணங்கள் ஈடேறும்.

விநாயகருக்கான கொழுக்கட்டையை சிறப்பாக செய்து மக்களுக்கு விற்பனை செய்யும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ், ஸ்நாக்ஸ், பேக்கரி & ரெஸ்டாரெண்ட் குழும நிறுவன தலைவர் கே.ஆர்.வி.கணேசன் கொழுக்கட்டையைப் பற்றி தெரிவித்ததாவது:

விநாயக சதுர்த்தின்னாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கொழுக்கட்டைதான். அதனை நாங்கள் வருடத்தின் எல்லா நாளும் விற்பனை செய்கிறோம், விநாயகா; சதுர்த்தி அன்று பல வகையான கொழுக்கட்டைகளை செய்வதால் வாடிக்கையாளர்களுக்கு பிடித்ததை வாங்கலாம்.

கொழுக்கட்டை செய்த நாளன்றே உண்பதால் மிகவும் புதிய பதார்த்தமாக இருக்கும். அரிசி மாவு மட்டும் உபயோகிப்பதால் உடலுக்கு எந்த தீங்கும் கிடையாது. மேலும் நீராவியில் வேக வைப்பதால் உடல்நலத்திற்கு நல்லது.

மருத்துவர்கள் அனைவரும் ஆவியில் வேக வைத்த பதார்த்தங்களை பரிந்துரைக்கின்றனர். பல வகையான கொழுக்கட்டைகள் இருப்பதால் குழந்தைகளையும் பெரியவர்களையும் திருப்திபடுத்த முடியும். இந்த ஆண்டு விநாயக சதுர்த்தியன்று முகூர்த்த நாள், ஆகையால் தங்களது விஷேத்தன்று வரும் அனைவருக்கும் கொழுக்கட்டை வழங்க பல வாடிக்கையாளர்கள் எங்களிடம் முன் கூட்டியே ஆர்டர் செய்துள்ளனர்.

வாடிக்கையாளர்களுக்காக 1/4 கிலோ, 1/2 கிலோ மற்றும் 1 கிலோ கிப்ட்களிலும் கொழுக்கட்டை கிடைக்கிறது. விபரம் தேவைப்படுவோர் 7373041434 என்ற எங்களது வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

ஐந்துகரத்தானுக்கு பிடித்த ஆரோக்கியமான சுவையான கொழுக்கட்டையை பிரசாதமாக படைத்து ஆணைமுகத்தான் அருளை அனைவரும் பெருவோம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!