Vehicles seized in cases auctioned: Perambalur District Police Notice!
பெரம்பலூர் மாவட்டத்தில் 102 CrPC வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 114 வாகனங்களை, அரசுக்கு ஆதாயம் தேடும் நோக்கத்தில் பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா ஏலம் விட அனுமதி வழங்கியதின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவல்துறையினரால் 114 வாகனங்களையும் 15/03/2022 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விட்டு, கிடைக்கும் தொகையை அரசு ஆதாயம் ஆக்கப்படும் என போலீஸ் எஸ்.பி மணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் இரண்டு சக்கர வாகனங்களுக்கு ரூபாய் 1000-மும் மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூபாய் 2000-மும் காப்பீட்டுத் தொகையாக செலுத்தி தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடையாள எண் கொண்ட வில்லை வழங்கப்படும்.
பதிவு செய்த நபர்கள் மட்டுமே ஏலம் எடுக்க அனுமதிக்கப்படுவார்கள். உடனிருப்பவர்களுக்கு அனுமதி கிடையாது. அதிகபட்ச விலைக்கு வாகனங்களை ஏலத்திற்கு எடுத்தவர்கள் ஏலத்தொகை ஜி.எஸ்.டி- யுடன் சேர்த்து பிற்பகல் 03.00 மணிக்கு உரிய அலுவலரிடம் செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் தாங்கள் செலுத்திய காப்பீட்டு தொகை கழித்துக் கொள்ளப்படும், வாகனத்தை ஏலம் எடுத்தவர் உரிய தொகையை செலுத்த தவறினால் தாங்கள் கட்டிய காப்பீட்டு தொகையை திருப்பிதரப்படமாட்டாது.
ஏலம் ரூபாய் 100-ன் மடங்கில் கேட்கப்பட வேண்டும். வாகனத்துடன், வாகனம் ஏலத்தில் எடுத்ததற்கான சான்று மட்டுமே வழங்கப்படும் பதிவு செய்து வழங்க இயலாது. ஏல நடவடிக்கைகள் அனைத்தும் ஏலக்குழு அலுவலர்களால் முடிவு செய்யப்படும். பொது ஏலத்தில் காவல்துறையைச் சேர்ந்த எவரும் கலந்துகொள்ள அனுமதி இல்லை. வாகனங்களை 09.03.2022-ம் தேதி முதல் 14.03.2022ம் தேதி வரை நேரில் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஏதாவது ஒரு அடையாள அட்டையை எடுத்து வரவேண்டும். ஏலம் எடுக்க வருபவர்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் மற்றும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.