Venture at a farmer’s house near Perambalur: 10 pound gold jewelery, Rs. 1.5 lakh robbery! Police investigation !!
பெரம்பலூர் அருகே உள்ள வடக்கு மாதவி கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து மகன் செல்லப்பிள்ளை (60), விவசாயியான இவர் ஊருக்கு அருகாமையில் உள்ள அவரது வயலிலேயே மெத்தை வீடு கட்டி விவசாயம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்றிரவு செல்லப்பிள்ளை அவரது மனைவி பூவாயி வீட்டின் ஒரு பகுதியிலும், பின்புறம் உள்ள மற்றொரு வீட்டில் அவரது இளைய மகன் அசோக் அவரது மனைவி வனிதா மற்றும் குழந்தைகளுடன் வழக்கம் போல் தூங்க சென்றனர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை அசோக் பால் கறப்பதற்காக எழுந்து சென்றவர் போனை சார்ஜ் போட வீட்டினுள் சென்றார். அப்போது, வீட்டை பார்த்த போது வீட்டின் கதவுகள் திறந்து கிடந்ததோடு, வீட்டினுள் இருந்த 2 பீரோக்களும் திறக்கப்பட்டு, அதிலிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 50 ஆயிரம் ரொக்க பணம் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த செல்லப்பிள்ளை உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் பெரம்பலூர் போலீசார் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையில், மோப்ப நாய் மற்றும் தடய அறிவியல் நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து தடையங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே திருட்டு சம்பவம் நிகழ்ந்த விவசாயி செல்லப்பிள்ளை வீட்டில் 3 நாய்கள் வளர்த்து வரும் நிலையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல், அதற்கு மயக்க பிஸ்கெட்டுகள் கொடுத்து விட்டு, திருட்டு சம்பவத்தை அரங்கேற்றியது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.