
Venture in Perambalur: 35 pounds of gold jewelry in the house went to church to pray for theft
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலை, கணபதி நகரில் வசிப்பவர் சுரேந்தர் (வயது 30), சிசிடிவி பொருத்தும் கடை நடத்தி வரும் இவர் தனது மனைவி ஜெனிபர் (26), மகன் சுஜன்(4) ஆகியோருடன் நேற்று நள்ளிரவு கிருஸ்துமஸ் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்காக சென்று விட்டு, மீண்டும் வீடு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவீல் வைத்திருந்த 35 பவுன் தங்க நகை மற்றும் ஆயிரக்கணக்கான ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
இதுகுறித்து சுரேந்தர் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக பெரம்பலூர் நகரில் அடுத்தடுத்து நிகழும் தொடர் சம்பவங்களால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.