Veppur 7 lakh worth of electrical lighting in the high towers of the new inaugurated M.P Chantirakasi
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூரில் புதிதாக அமைக்கப்படட உயர் கோபுர மின்விளக்கை எம்.பி சந்திரகாசி மற்றும் குன்னம் எம்.எல்.ஏவும், மாவட்ட செயலாளருமான ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வேப்பூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் உயர் கோபுர மின் விளக்கு வேண்டும் என சிதம்பரம் பாராளுமன்ற உறுபினர் சந்திராகாசியிடம் விடுத்த கோரிக்கை பேரில் எம்.பி சந்திரகாசி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 7 லட்சம் மதிப்பில் வேப்பூரில் புதிய உயர் கோபுர மின்விளக்கு அமைக்க உத்தரவிட்டார்.
இதன் தொடக்க விழா இன்று காலை வேப்பூர் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின் விளக்கை எம்.பி சந்திரகாசி மற்றும் குன்னம் சட்டமன்ற உறுபினர்ஆர்.டி.இராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட்டனர்.
அப்போது ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கர்ணன், பெரம்பலூர் ஸ்கை சிஸ்டம் நிர்வாக இயக்குநர் சதிஷ்குமார், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் வெண்மணி காமராஜ் , வேப்பூர் கிளைச் செயலாளர் மணி, குன்னம் கூட்டுறவு பால் சங்க தலைவர் குணசீலன், குன்னம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோவன், அந்தூர் ராஜேந்திரன், வேப்பூர் பால் சங்க தலைவர் தஸ்தஹீர், ஒலைப்பாடி ரத்தினம், உள்ளிட்ட கட்சி நிர்வாகிள், பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.