Veppur fishing festival: people were bestowed with fishes

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் ஏரியில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது

வேப்பூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரிய ஏரியில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மீன் பிடி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

வேப்பூரில் வசிக்கும் கிராம மக்களிடையே இரண்டு நாட்களுக்கு முன்னர் வேப்பூர் ஏரியில் மின் பிடி திருவிழா நடைபெறும் என்பதையும் உங்கள் உறவினர்களிடம் தகவல்தெரிவிக்கவும், யார் வேண்டுமனாலும் மீன் பிடித்துக் கொள்ளலாம் என தன்டோர மூலம் அறிவிப்பு செய்யப்பபட்டது.

வேப்பூரை சேர்ந்தவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் தகவல் தெரிவித்து மீன் பிடிக்க அழைப்பு விடுத்தனர். அதன்பேரில், வேப்பூர் மற்றும் சுற்றியுள்ள நன்னை, கல்லை, ஒலைப் பாடி, பரவாய் , அகரம், வயலப்பாடி, சாத்தநத்தம், மண்டபம் , கிழுமத்தூர், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் இந்த மீன் பிடி திருவிழாவில் கலந்து கொண்டு இந்த மீன் பிடி திருவிழாவில் இளைஞர்கள் முதல் பெண்கள் ஆகியோர் மிகவும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஏரியில் இறங்கி மீண்களை பிடித்தனர். அப்போது சிலருக்கு கெண்டை, ஜிலோபி, நெத்திலிமீன், விலாங்கு மீன், போன்றவகை மீன்களை பிடித்து மகிழ்ச்சியுடன் அள்ளி சென்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!