Verbal demonstration in Perambalur on behalf of the Coalition Against the Police Department, on behalf of VCK

பெரம்பலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில், வாசல் இருப்பு வாய்மொழி கண்ட ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில், வி.சி.க மாநில செயலாளர் வீர.செங்கோலன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர்கள் செல்லதுரை, ஞானசேகரன், திராவிடர் கழகம் மாவட்ட தலைவர் தங்கராசு, திமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி வழக்கறிஞர் அருண் இந்தோ அறக்கட்டளை நிறுவனர் செல்வகுமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் வழக்கறிஞர் மா.அண்ணாதுரை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்.
நிகழ்ச்சியை மாவட்ட செய்தி தொடர்பாளர் மு.உதயகுமார் செய்திருந்தார். ஆர்ப்பாட்டத்தில், தென்காசி விவசாயி அணைக்கரை முத்துவை சித்திரவதை செய்து படுகொலை செய்த வனக் காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யக்கோரியும், வேலூர் மாவட்டம் ஷாலினி மற்றும் அவரது குழந்தையை சட்ட விரோதமாக கைது செய்து சித்ரவதை செய்த காட்பாடி காவல் ஆய்வாளர் புகழை கண்டித்தும், சாத்தான்குளம் காவல் நிலைய இரட்டை படுகொலைக்கு துணை புரிந்த அரசு மருத்துவர் வினீலா, நீதிமன்ற நடுவர் D.சரவணன் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யக்கோரியும் கோரிக்கைகள் முன் வைக்கப்ட்டன.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!