Village assistants in the Namakkal Taluk office are darna
நாமக்கல் தாலுக்கா அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்நாமக்கல் தாலுக்கா அலுவலகத்தில் கிராம உதவியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்துக்கு சங்கத்தின் வட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர் பரமசிவம், வட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பழைய முறையிலான ஓய்வூதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு ஜமாபந்தி படி வழங்க வேண்டும். இயற்கை இடபாடு பணிக்கு சிறப்பு படி வழங்க வேண்டும்.
பொங்கல் போனஸ் நாள் கணக்கில் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் நாமக்கல் தாலுகாவை சேர்ந்த கிராம உதவியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.