Village council meeting: Perambalur Collector instructed the officials to go street to street with the people to rectify the grievances!

பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியம், சிறுமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொன்னகரத்தில், இன்று உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடந்தது. அதில், கலெக்டர் கற்பகம் கலந்து கொண்டு பொதுமக்களுடன் கலந்துரையாடினார். அப்போது கூட்டத்தில் இருந்த பொதுமக்கள் சுத்தமான குடிநீர் இந்த கிராமத்தில் விநியோகம் செய்யப்படவில்லை என்றும் மேலும் விநியோகம் செய்யப்படும் குடிநீரில் அளவுக்கு அதிகமான சுண்ணாம்பு இருப்பதாகவும் இதனால் உடலில் சிறுநீரக கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகள் உண்டாக்குவதாகவும், மேலும் தனி மனித கழிப்பறைகள் இல்லாததால் சமுதாய பொது கழிப்பிட வசதி ஏற்படுத்தி செய்து தர வேண்டும் என்றும், சிறுமத்தூர் ஊராட்சியில் 4 ஊர்கள் உள்ளன.

இதில், ஒரு ஊரில் மட்டும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது அதுவும் நீண்ட காலமாக பழுதாக இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்த கலெக்டர் கற்பகம் துறை அதிகாரிகளை பொதுமக்கள் முன்னிலையில் விளக்கம் கூற செய்தார். இப்போது ஓர் ஆண்டுக்கு சுமார் ஓர் ஆண்டுக்கு பிறகு ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தனி நபர் கழிப்பறைகள் இப்போது சமுதாய பொது கழிப்பறை கட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் கூட்டத்தில் சிறுதானியம் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் தங்களது துறை பணிகளை எடுத்துரைத்து சேவைகளை பயன்படுத்திக் கொள்ள தெரிவித்தனர். ஆர்டிஓ நிறைமதி குன்னம் தாசில்தார் அனிதா உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்ட கலெக்டரை, பொதுமக்கள் குடிநீர், சாலை, சாக்கடை, உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நேரில் பார்வையிட வருமாறு அழைத்தனர். கூட்டத்தில், உறுதியளித்தப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலெக்டர் கற்பகம் பொதுமக்கள் அழைப்பின் பேரில் அவர்கள் குறைகளை நேரில் நடந்து சென்று பார்வையிட்டார். இதை பார்த்த ஒவ்வொரு தெரு மக்களும், தங்கள் பகுதியை வந்து பார்வையிடும்படி அழைத்தனர். அவர்கள் பகுதிகளுக்கும் சென்று அவர்கள் குறைகளை பார்த்து அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகியோர்களுக்கு அறிவுறுத்தினர். மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கடமையை சரி செய்யவும், அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவும், எடுத்துரைத்தார். பணிக்கு வாரமல் இருக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், வேறு நபர்களை நியமனம் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.

இன்று அப்பகுதியில், மக்கள் சேவையே மகேசன் சேவை என கலெக்டர் கற்பகம், தங்கள் குறைகளை தீர்க்க வந்ததை பார்த்து பொதுமக்கள் மிக்க மகிழச்சி அடைந்தனர். முன்னாதாக நலத்திட்ட உதவிகளை பயானாளிகளுக்கு வழங்கினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!