Village Police Project: Police SP Launched in Perambalur!

பெரம்பலூர் மாவட்டத்தில், நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டறிவும், தடுக்கும் வகையில் உதவுவதற்காக இன்று பெரம்பலூர் எஸ்.பி அலுவலகத்தில், எஸ்.பி ஷ்யமளா தேவி வாட்ஸ் குருப்பை தொடங்கி வைத்தார். அதில், கிராம மக்களும், காவல் துறைக்கும் உடனடி தகவல் பரிமாற்றத்திற்கும், விரைந்து நடவடிக்கை எடுக்கும் நோக்கத்துடன் இந்து வாட்ஸ்குருப்கள் தொடங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒரு காவலர் நியமிக்கப்பட்டு, அவரும், அதிகாரிகளும், கிராம மக்களும் இணைந்து செயல்படும் வகையில் குரூப் உருவாக்கப்பட்டுள்ளது. வாரம் ஒரு முறை காவலர்கள் ஒதுக்ப்பட்ட கிராமத்திற்கு சென்று ஆய்வு செய்து மாவட்ட காவல் அலுவலகத்தில் சமர்ப்பிப்பார்கள் என்றும், உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படுவதால் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார். அப்போது ஏ.எஸ்.பிக்கள் பாண்டியன், மதியழகன், ஸ்பெசல் பிரான்ச் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலா, மதுமதி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

போலீஸ் ஸ்டேசன்கள் வாரியாக பெரம்பலூர் 16, பாடாலூர் 16, மருவத்தூர் 17, அரும்பாவூர் 17, குன்னம் 34, மங்களமேடு 18, வி.களத்தூர் 18, கை.களத்தூர் 13 என மொத்தம் 146 வாட்ஸ் குரூப்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வில்லேஜ் விஜிலென்ஸ் கமிட்டி திட்டம் சற்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!