Villagers besieged the Perambalur Collector’s office and staged a dharna protest demanding additional bus facilities!
பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளம் அருகே உள்ள மாவிலிங்கை கிராம மக்கள், நகரத்திற்கு சென்று வர கூடுதல் பேருந்து வசதி கோரி, இன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில நடக்கும் குறைத்தீர் கூட்டத்தில் கலெக்டரை பார்த்து மனு கொடுக்க சுமார் 100 பேர் வந்திருந்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது:
மாவிலிங்கை கிராமத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், பேருந்துகளில் தொங்கிக் கொண்டும், போதிய இடவசதி இல்லாமல் படிக்கட்டுகளிலும் பயணம் செய்வதாகவும், ஓரிரு பேருந்துகள் இயக்குவதால், உரிய காலத்தில் பள்ளிக்கு செல்ல முடியவில்லை என தெரிவித்தனர். மேலும், இது அரசியல்வாதிகள் அதிகாரிகளிடம், பல மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தனர்.
கலெக்டரிடம் மனு கொடுக்க சென்ற அவர்களை, காவலர்கள் தடுத்து நிறுத்தியதால், அக்கிராம மக்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், ஆலத்தூர் தாசில்தார் முத்துக்குமார் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர். 5 பேரும் மட்டும் குறைத்தீர் கூட்டத்தில் மனு கொடுக்க ஏற்பாடு செய்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பாதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
விளம்பரங்கள் :