Villagers petition Collector’s office against construction of stone crusher near Perambalur!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று சித்தளி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வந்திருந்தனர். அவர்கள் ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்த மனுவில், தங்கள் கிராமத்தில் விவசாய விளைநிலங்களுக்கு அருகே கல் உடைக்கும் கிரஷர் புதிதாக தனியார் ஒருவர் அமைக்க இருப்பதாகவும், இதற்காக குன்னம் வட்டாட்சியர் அளவீடு செய்துள்ளதாகவும், அந்த பகுதியில் கிரஷர் துவங்கினால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு, வாகன போக்குவரத்து அதிகரித்து விபத்துக்கள் ஏற்படும் என்றும், குடிநீர் மற்றும் காற்று மாசு ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உள்ளிட்டவைகளுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதோடு உயிரிழிப்பு ஏற்படக்கூடும் என்பதால் இந்த பகுதியில் கிரஷர் அமைப்பதற்கு தாங்கள் கிராமத்து மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அதனால் கிரஷர் அமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது என்றும் அந்த மனுவில் தெரிவித்திருந்தனர். தங்களின் வாழ்வாதாரமாகிய விளை நிலங்களை பாழ்படுத்தும் இந்த திட்டத்தை இங்கு செயல்படுத்த மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க கூடாது என்றும், தங்கள் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.