Villagers protest near Perambalur by seizing 20 trucks of Tiruchi DMK leader who smuggled gravel soil!

பெரம்பலூர் அருகே உள்ளது எம்.ஆர்.எஃப் டயர் தொழிற்சாலை. இந்த ஆலையில் விரிவாக்கம் மற்றும், புத்தாக்கம் பணிகள் நடந்து வருகிறது. அதை எல். அண்ட் டி நிறுவனம் கட்டுமான பணிகளை செய்து வருவதாக கூறப்படுகிறது, அதற்கு திருச்சி மாவட்டம் தச்சங்குறிச்சியில் இருந்து சுமார் 20 லாரிகளில் கிராவல் மண் கடத்தி வந்ததை கண்டறிந்த நாரணமங்கலம் கிராம மக்கள் ஒன்று திரண்டு, வந்து இன்று லாரிகளை கையும் களவுமாக சிறைப்பிடித்து பல மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அங்கு வந்த திருச்சி மாவட்டம், மணப்பாறை திமுக ஒன்றிய செயலாளர் ஆராக்கியராஜ் பொதுமக்களிடம் மன்றாடினார். பின்னர், திருச்சி – பெரம்பலூர் மாவட்ட வருவாய் துறையினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பபட்டது. பொதுமக்கள் லாரிகளை விடுவித்தனர். அதிகாரிகள் உடந்தையுடன் செயல்பட்ட இந்த கடத்தல் சம்பவத்தை பொதுமக்கள் தடுத்தி நிறுத்தியது, இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!