Virian snake on the 3rd floor of Perambalur house! Rescue the deer from the well!!
பெரம்பலூர் நகரில் வீட்டின் 3வது மாடியில் பாத்ரூமில் ஒளிந்திருந்த கடுமையான விஷம் கொண்ட விரியன் பாம்பை தீயணைப்பு படையினர் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பெரம்பலூர் – துறையூர் சாலையில் உள்ள கல்யாண் நகரில் ஒருவது வீட்டில் பாத்ரூமில் கட்டு விரியன் இருப்பதாக இன்று காலை கிடைத்த தகவலின் பேரில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வீரபாகு தலைமையில் சென்ற தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் கடுமையாக சிரமத்திற்கு பிறகு பாம்பை பாத்ரூமில் இருந்ததை லாகமாக பிடித்து வந்தனர். பின்னர், கால்நடை மருத்துவரிடம் பரிசோதனைக்கு உட்படுத்தி அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதே போன்று, பெரம்பலூர் மாவட்டம் மலையாளப்பட்டி கிராமத்தில் இன்று காலை தண்ணீர் தேடி வந்த மான் ஒன்று விவசாயி ஒருவரின் கிணற்றில் விழுந்து தத்தளித்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு அதனை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்