Visuvagudi jallikattu near in perambalur: 300 Bulls, 283 Gentlemans participated
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாடு பிடி வீரர்களும் வருவாய்த்துறை மூலமாக முறையாக பெயர் பதிவு செய்யப்பட்டு, இரண்டு கட்டங்களாக மாடு பிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க களமிரக்கப்பட்டனர். மேலும், மாடு பிடி வீரர்களின் உடல்தகுதி குறித்து மருத்துவக்குழுவினர் முழு ஆய்வு செய்த பின்னரே, அவர்கள் போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
கால்நடை பராமரிப்புத் துறையினர் மூலமாக போட்டியில் கலந்துகொள்ளும் மாடுகளுக்கு போதைப்பொருள் ஏதும் தரப்பட்டுள்ளனவா, போட்டியில் கலந்துகொள்வதற்கு ஏதுவான உடல் தகுதி பெற்றுள்ளதா என்று சான்றளிக்கப்பட பின்னரே மாடுகள் போட்டியில் கலந்துகொள்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டன.
மேலும் மருத்துவத்துறையின் மூலம் மாடு பிடி வீரர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் போது அவர;களுக்கு முதலுதவி அளிக்கும் மருத்துவக்குழுவினருடன், இரண்டு அவசர கால ஊர;திகளும் தயார; நிலையில் வைக்கபட்டிருந்தன. ஜல்லிக்கட்டு நடைபெற்ற முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டது.
இன்று நடைபெற்ற போட்டியில் பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்ட 400 காளைகள் பதிவு செய்யப்பட்டது. இதில் போதிய வயதில்லாத காரணத்தால் 16 காளைகள் நிராகரிக்கப்பட்டு, மீதமுள்ள 309 காளைகள் போட்டிகளில் பங்கேற்றது.
அதேபோல பெரம்பலுhர;, அரியலுhர;, திருச்சி, தஞ்சை, சேலம், மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 276 மாடுபிடி வீரர்கள் பதிவுசெய்திருந்து பங்கேற்றனர். போட்டியில் கலந்துகொண்டு மாடுகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்கள் அடக்காத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் விழாக்குழுவினர் ஏராளமான சிறப்பு பரிசுகளை வழங்கினர். மேலும், இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 6 மாடு பிடி வீரர்கள் உள்ளிட்ட 13 நபர்களுக்கு லேசான சிறு காயங்கள் ஏற்ப்பட்டது. மருத்துவக் குழுவினர் முதலுதவி மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.