Visuvakudi jallikattu : 10 injured
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சி விசுவகுடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா நடத்த விழா கிராம மக்களின் சார்பில் ஏற்பாடு செய்து, அதற்கான அனுமதியையும் பெற்று இன்று ஜல்லிக்கட்டு நடத்தினர்.
ஜல்லிக்கட்டு நடக்கும் பகுதியில், வருவாய், காவல், கால்நடைத்துறையினர், மருத்துவத்துறையினர் மாடு பிடி வீரர்கள், காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு பின்பே ஜல்லிகட்டிற்கு அனுமதித்தனர்.
இதனையடுத்து இன்று காலை 9 மணியளவில் ஜல்லிக்கட்டுவிழா தொடங்கியது. இதில் அன்னமங்கலம், தொண்டமாந்துறை, விசுவகுடி, முகமதுபட்டிணம், திருச்சி மாவட்டம் இருங்களூர், ஈச்சம்பட்டி, சேலம் மாவட்டம் தம்மம்பட்டி, கூடமலை, ஆத்தூர், கெங்கவல்லி, மங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கலந்து கொண்ட 300 க்கும் மேற்பட்ட காளைகள் வாடி வாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டது. சீறி பாய்ந்த காளைகளை 200 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு பிடித்தனர்.
இதில், மாடு பிடி வீரர்கள் 10 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிக்சையளிக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
.
விழாவில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் விழா குழுவின் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது.
பல்வேறு ஊர்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு ஜல்லிக்கட்டை பார்த்து ரசித்தனர். கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க கிராம மக்கள் சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிகளை அரும்பாவூர் போலீசார் மேற்கொண்டிருந்தனர். .