Volleyball match on behalf of DMK sports development team in Perambalur!
கலைஞர் நூற்றாண்டு விழா, திமுக இளைஞரணிச் செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி , பெரம்பலூர் மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் களத்தூர்.வெ.கார்மேகம் தலைமையில் நடந்தது.
திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன், எம்.எல்.ஏ. பிரபாகரன் தொடங்கி வைத்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.சி. பாஸ்கர், சன்.சம்பத், ஆலத்தூர் திமுக மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் டாக்டர்.வல்லபன் உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.
துணை அமைப்பாளர்கள் சாம்ராஜ், மனோகர், வெற்றிவேல், ரகு பிரனேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் இருந்து விளையாட்டு வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, துணை அமைப்பாளர் குணசேகரன் வரவேற்றார். துணை அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.