Volleyball Tournament in Perambalur: District Volleyball Association President Paramesh Kumar Announcement!

Copyringt / courtesy : pinpng.com
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேசன் சார்பில் வருகிற 30.09.2023 மற்றும் 01.10.2023 ஆகிய தேதிகளில் ஆண்கள் , பெண்களுக்கான வாலிபால் போட்டிகள் நடைபெறுகிறது என வாலிபால் சங்கத்தின் மாவட்ட தலைவர் இரா.ப.பரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட வாலிபால் சங்கத்தின் சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 2 நாட்கள் வாலிபால் போட்டிகள் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. மேற்கூறிய நாட்களில் காலை 9.30 மணிமுதல் நடைபெறும் இந்த போட்டியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும்.
9443438912 என்ற அலைபேசி எண்ணில் முன் பதிவு செய்ய வேண்டும். முன் பதிவு கட்டணம் கிடையாது. மதிய உணவு வழங்கப்படும். பங்கேற்கும் வீரர்கள் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். கிளப் அணியினர் அவரவர் கிளப்பிற்கு மட்டுமே விளையாட வேண்டும். பள்ளி, கல்லூரி அணியினர் கல்வி சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். வெற்றி பெறும் அணியினர் மண்டல அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்படுவர் என தெரிவித்துள்ளார்.
விளம்பரம்: https://dsmatrimony.net/