1.4.2016 masque2mosque01.4.2016 AT MoSQUEவாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை முஸ்லீம் சமுதாய மக்களிடம் ஏற்ப்படுத்திடும் வகையில் வடக்கு மாதவி சாலை பள்ளி வாசலில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி வழங்கினார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைத்து தரப்பு மக்களும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வாரசந்தைகள், கோயில் திருவிழாக்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அதிகளவில் தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி இன்று வடக்கு மாதவி சாலையிலுள்ள நூர் பள்ளிவாசலில் ஜிம்ஆ தொழுகையில் கலந்து கொண்ட முஸ்லிம் சமுதாய மக்களிடம் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மீனாட்சி வழங்கி, தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர் உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், அதனால் இந்திய தேசத்திற்கு உண்டாக கூடிய நன்மைகள் குறித்தும் மாவட்ட வருவாய் அலுவலர் முஸ்லீம் சமுதாய மக்களிடம் எடுத்துக் கூறினார்.

அதனை தொடர்ந்து பள்ளிவாசலின் நுழைவு வாயிலில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிநவீன மின்னனு திரை வாகனத்தின் மூலம் இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் பிரபல திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் பொதுமக்களின் பார்வைக்காக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரா.பேபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!