Vote for Lotus to continue to get education medicine for free! Candidate Parivendar’s achievements in the areas of the Thuraiyur Assembly Constituency collecting votes!

பெரம்பலூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிஜேபி கூட்டணி கட்சி வேட்பாளரான ஐ ஜே கே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் துறையூர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தனது சாதனைகளை விளக்கி வாக்கு சேகரித்தார் பேசியதாவது :

2019- தேர்தலில் வாக்குகளை அள்ளி தந்தீர்கள். அரியலூர் – பெரம் Uலூர் – துறையூர் – நாமக்கல் நகரங்களை இணைக்கும் ரயில்வே திட்டம் 10 ஆண்டுகளாக முயற்சி செய்தும் முடியாத நிலையில் இந்த முறை தேர்ந்தெடுத்தால் உறுதியாக திட்டம் கொண்டு வரப்படும். மேலும், பச்சைமலையை சுற்றுவா தலமாக்கப்படும், சைனிக் பள்ளியும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் சொன்னதை செய்து விட்டு உங்கள் முன் நிற்கிறேன். 1200 மாணவர்களுக்கு உயர் கல்வி தருவேன் என்று கூறினேன். அதனை நிறைவேற்றினேன். மீண்டும் இத்திட்டம் தொடரும்.. இந்த தேர்தலில் மீண்டும் ஒரு வாக்குறுதி தருகிறேன்.

1500 ஏழை குடும்பங்களுக்கு உயர் மருத்துவம் வழங்கப்படும் என வாக்குறுதி தருகிறேன். டெல்லியில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளார்.
அவரை எதிர்த்த நிற்க ஒருவரும் இல்லை.

தமிழ்நாட்டில் இருந்த சென்ற எம்.பி கள் பாராளுமன்றத்தை முடக்குவது, நடத்துவிடாமல் இருப்பது இந்த வேலையை செய்கின்றனர். ஊழல் செய்யும் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டாம். ஊழல் கட்சிகளை ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் மோடியின் கரத்தை வலுப்படுத்த, ஊக்கப்படுத்த தாமரைக்கு வாக்களியுங்கள். சூரியன் சுட்டெரிக்கும், தாமரை என்பது கல்வி கொடுக்கும் சரஸ்வதியின் பீடம் தாமரை, தாமரைக்கு வாக்களித்தால் நல்ல படிப்பார்கள், உதயசூரியனுக்கு வாக்களித்தால் சுட்டெரித்து விடும் என்ன பேசினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!