Voter list correction; Additional Special Camp: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2022-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்துள்ள நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் திருத்தம், பெயர் நீக்கல், முகவரி திருத்தம் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளவும் 01.11.2021 முதல் 30.11.2021 வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது.
வடகிழக்கு பருமழையினால் வாக்காளர்கள் வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்ல ஏற்பட்ட சிரமங்களை கருத்தில் கொண்டு வாக்காளர்களின் நலன் கருதி வருகின்ற 20 மற்றும் 21 ம் தேதிகளில் கூடுதல் சிறப்பு முகாம்கள் நடத்திட தேர்த்தல் ஆணையத்தால் உத்திரவிடப்பட்டுள்ளது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும், வருகின்ற 20 மற்றும் 21 ம் தேதியில் நடைபெற உள்ள கூடுதல் சிறப்பு முகாம்களில் அனைத்து வாக்காளர்களும் உரிய ஆவணங்களுடன் நேரில் அனுகி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்திட விண்ணப்பத்தை பெற்று உடன் தாக்கல் செய்து கொள்ளலாம். மேலும், வாக்காளர்கள் ww.nvsp.in என்ற இணையதள முகவரிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
சிறப்பு முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களை உரிய காலத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களின் பெயர்களை சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.