Voter list for public view! Perambalur Collector Information!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 7 பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக 02.01.2020 முதல் 30.06.2021 வரை ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் இறப்பு மற்றும் இராஜினாமா போன்ற பல்வேறு காரணங்களினால் ஏற்பட்டுள்ள 1-கிராம ஊராட்சி தலைவர் மற்றும் 6-கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான காலியிடங்கள் (ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஆதனூர் கிராம ஊராட்சி தலைவர் வாக்காளர்கள் எண்ணிக்கை-2274, கூடலூர் கிராம ஊராட்சி வார்டு எண்: 5 வாக்காளர்கள் எண்ணிக்கை-210 மற்றும் நாரணமங்கலம் கிராம ஊராட்சி வார்டு எண்: 3 வாக்காளர்கள் எண்ணிக்கை-359, வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம், பிரம்மதேசம் கிராம ஊராட்சி வார்டு எண்: 6 வாக்காளர்கள் எண்ணிக்கை-155 மற்றும் வாலிகண்டபுரம் கிராம ஊராட்சி வார்டு எண்: 7 வாக்காளர்கள் எண்ணிக்கை-387, வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், ஆடுதுறை கிராம ஊராட்சி வார்டு எண்: 4 வாக்காளர்கள் எண்ணிக்கை-299 மற்றும் ஓலைப்பாடி கிராம ஊராட்சி வார்டு எண் 7 வாக்காளர்கள் எண்ணிக்கை-770) ஆகிய இடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்துவதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் 31.08.2021 காலை 10.00 மணியளவில் மாவட்ட ஊராட்சி அலுவலகம், தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் தொடர்புடைய கிராம ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வாக்காளர் பட்டியல் இந்திய தேர்தல் ஆணையம் தயாரித்து கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியிடப்பட்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் விடுபட்டுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர்களை சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் சென்று விண்ணப்பித்து அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் கிராம ஊராட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்டவர்களின் பெயர் சேர்க்கப்படும், இவ்வாறு தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!