பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டாலும், குறிப்பாக கடந்த தேர்தல்களில் வாக்குகள் 70 சதவீதத்திற்கும் குறைவாகப் பதிவாகியுள்ள பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு 100 சதவிகித வாக்களார் பதிவு மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் சந்திப்பு என்ற நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமயில் துணை ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு 100 சதவிகித வாக்களார் பதிவு மற்றும் வாக்குப்பதிவு எதற்காக என்பது குறித்த விளக்கங்களை அளிக்க உள்ளனர்.
அதனடிப்படையில் மாவட்ட வருவாய் அலுவலர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், உதவி ஆணையர் (கலால்), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்,
புதுவாழ்வுத்திட்ட அலுவலர் உள்ளிட்ட அலுவலர்கள் கடந்த தேர்தல்களில் குறைவாக வாக்குப்பதிவான இடங்களுக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்து வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.
இந்த நிகழ்ச்சி மார்ச் 22 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.