Voting Polling Mechine, allocated checking machines in Perambalur
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2019 முன்னிட்டு 147. பெரம்பலூர் (தனி) மற்றும் 148.குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு கணினி மூலமாக மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரி பார்க்க கூடிய கருவி ஆகிய இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னனு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரி பார்க்க கூடிய கருவி ஆகிய இயந்திரங்களின் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டது.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 2240 இல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

அவ்வாறு வாய்மொழியாக பெறப்படும் புகார்களை நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பி தீர்வு செய்யப்படும்.மேலும் மொபைல் ஆப் மூலமாக புகைப்படமாகவும், வீடியோவாகவும் புகார் அளிக்கலாம் எனவும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் அங்கீகரிகப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் தேர்தல் பணி செய்யும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!