Waqf Board’s assets will be restored in Tamil Nadu: Minister Thangamani

தமிழகத்தில் ஆக்கிமிக்கப்பட்டுள்ள வக்பு வாரிய சொத்துகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் கோட்டை திப்புசுல்தான் பள்ளிவாசல் மற்றும் பேட்டை அஞ்சுமனே பள்ளிவாசல்களில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் தலைமை வகித்தார்.

எம்பி சுந்தரம், எம்எல்ஏக்கள் பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி பங்கேற்றுபேசியதாவது:

சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசாக தமிழக அரசு திகழ்ந்து வருகிறது. ஜாதி, மத பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுகிறது.

வக்புவாரிய தலைவராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அன்வர்ராஜா சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.20 ஆயிரம் கோடி வக்பு வாரிய சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்.

அதை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். சிறுபான்மையின மக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் கேட்டு நிவர்த்தி செய்து வருகிறோம்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சாதி, மதத்துக்கு அப்பாற்பட்டு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதன்படியே நாங்களும் பணியாற்றி வருகிறோம் என பேசினார்.

விழாவில் வக்போர்டு தலைவர் அன்வர்ராஜா பேசியதாவது:

கடந்த 50 ஆண்டு காலமாக ரம்ஜான் பண்டிகை வெவ்வேறு நாள்களில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் இந்தாண்டு உலகம் முழுவதும் ஒரே நாளில் ரம்ராஜன் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாமிய மக்களுக்கு தமிழக அரசு என்றும் உறுதுணையாக இருக்கும் என பேசினார்.

நிகழ்ச்சியில் கோட்டை பள்ளிவாசல் தலைவர் சபியுல்லா, செயலாளர் பஷீர், துணைத்தலைவர் தாகீர், உறுப்பினர் நவாப்கான், பொருளாளர் பாபு, பேட்டை பள்ளிவாசல் முத்தவல்லி ஷேக் நவீத், செலாளர் ரபீக், துணைத்தலைவர் முப்தி செரீப்கான் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!