Ward members object to resolutions claiming panchayat leader’s husband has authority over panchayat functions

பெரம்பலூர் ஒன்றியம் எசனையை அடுத்துள்ள கீழக்கரை ஊராட்சி மன்றக் கூட்டம் தலைவர் ஜெயந்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பிர்கள், ஊராட்சி தலைவர் ஜெயந்தியின் கணவர் பால் கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிந்து வரும் நிலையில், கூட்டுறவுத்துறை ஊழியரான அவர் கீழக்கரை ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து அடிக்கடி அதிகாரம் செலுத்துவதகவும், முறையற்ற செயல்பாடுகளை செயல்பாடுகளை கண்டித்தும், குறைகளை தெரிவிக்க பொதுமக்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை தலைவரை கொள்ள முடிவதில்லை எனக் கூறி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மான புத்தகத்தில் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தனர். இதனிடையே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், தொழிலாளர்களுக்கு வேலை வழங்குதில் பாகுபாடு பார்ப்பதோடு, ஒருமையில் மரியாதையின்றி பேசுவதாகவும், சிலருக்கு பல நாட்கள் தாமதப்படுத்தி பணி வழங்குவதாகவும், கூறி சுமார் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு, தலைவரின் கணவரை ஊராட்சி மன்ற அலுவலத்தில் இருந்து வெளியேற கோசமிட்டனர். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தலைவரின் கணவருக்கும், வார்டு உறுப்பினர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. தலைவரின் தீர்மான புத்தகத்தை பிடிங்கி சென்றதை கண்டித்ததோடு, ஊராட்சி செயலர் அவரிடம் இருந்து மீண்டும் தீர்மானப் புத்தகத்தை திரும்ப பெற்றுக் கொண்டார். வார்டு உறுப்பினர் தொடர்ந்து அவர் பேசுவதற்கும், பணியாளர்களை பணியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தலைவரின் கணவர், கூட்ட அறையில் இருந்து கோபத்துடன் வெளியேறினார். பின்னர், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் அமைதியாகி கலைந்து சென்றனர். கூட்டம் ஒத்தி வைப்பதாகவும், தீர்மான புத்தகத்தில் வெள்ளை தாள் கொண்டு ஒட்டப்பட்டது. சுமார் அரை மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


பெரம்பலூர் மாவட்டத்தில், பெரும்பாலான ஊர்களில் பெண்கள் தலைவராக இருக்கும் ஊர்களில் கணவர்களே நாட்டாமைகளாக வலம் வருகின்றனர். அவர்களே அனைத்து பேச்சு வார்த்தை மற்றும் அதிகாரம் செலுத்துபவர்களாக தலைவரின் நாற்காலியில் அமர்ந்து கொண்டு பணியிடுகின்றனர். வேப்பந்தட்டை ஒன்றியத்தில், பெண் தலைவரின் கணவருக்கு வணக்கம் வைக்காத காராணத்தால், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிபுரியும் ஒருவருக்கு 15 நாள் தாமதாக பணி வழங்க உத்தரவு பிறப்பித்த செயலும் அறங்கேறி உள்ளது. இது போன்ற நிலைகளுக்கு அதிகாரிகளே அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். அருகில் உள்ள கடலூர் மாவட்த்தை போன்று பெரம்பலூர் மாவட்டத்திலும், ஊராட்சி தலைவர்களின் கணவர்கள் நாட்டாமை செய்ய தடை விதிப்பதோடு, அரசு பெண் களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி அவர்களும், அனைத்து உரிமைகைள அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கத்தை, நிலை நாட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!