Water tank on behalf of Perambalur City DMK
பெரம்பலூர் மாவட்டத்தில் நிலவி வரும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு, பெரம்பலூர் நகர திமுக சார்பில் பழைய பேருந்து நிலையம், பெரியார் சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை திமுக மாவட்ட செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன் திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு சர்பத், மோர், வெள்ளரிக்காய், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார்.
இதில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ம.இராஜ்குமார், மாவட்ட பொருளாளர் செ.இரவிச்சந்திரன், பெரம்பலூர் ஒன்றிய கழகச் செயலாளர் எஸ். அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ)அப்துல் பாரூக், நகர துணைச் செயலாளர்கள் இ.பி.கோவிந்தன், சபியுல்லா, தொ.மு.ச.மாவட்ட கவுன்சில் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மணிவாசகம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நா.சுரேஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் அ.அப்துல்கரீம், மாவட்ட பிரதிநிதி அரனாரை ஜெயக்குமார், நகர மாணவரணி அமைப்பாளர் ரினோபாஸ்டின், வார்டு இளைஞரணி அமைப்பாளர் பார்த்திபன், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.