Water distribution companies demand local people to provide for cost of production

பெரம்பலூர் மாவட்டத்தில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சி ஏற்பட்டாலும், நிலத்தடி நீர் மட்டம் அதிக அளவில் பாதிப்பு இருக்காது. ஆனால், தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியால் தரையில் தண்ணீர் தேடும் போக்கு அதிகரித்து, சுமார் 500 முதல் ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து நீர் உறிஞ்சப்பட்டு படு பாதாளத்திற்கு சென்று விட்டது நிலத்தடி நீர் மட்டம், ஒரு காலத்தில் சுமார் 6 அடி ஆழமட்டத்தில் இருந்த நீர்மட்டம், மனித தேவையின் பேராசையால் சுமார் 50 அடிக்கு மேலும், 300 அடிக்கு கீழும் தண்ணீர் மட்டம் கடந்து சென்றுவிட்டது. மேலும், நவீன வேளாண்மை, தண்ணீர் வணிகமயதால், போன்ற காரணத்தால் நீர் அதிக உறிஞ்சப்பட்டு வருகிறது. இதனால், தண்ணீர் விற்பனை செய்யும் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டது. இதனால், கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். பலர் கால்நடை அடிமாட்டிற்கு விற்றும் வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் பயிரிடப்பட்ட பயிர், செடி, கோடி, மரம் போன்றவைகளை தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. குடிநீருக்காக பலர் குடங்களுடன் அலைந்து திரிந்து வரும் வேளையில் தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு தண்ணீர் விற்பனை செய்து பணம் பார்த்து வருகின்றனர். ஆனால், விவசாயிகள் வேலையின்றி வருமானம் இழப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

பொதுச் சொத்தான நீரை விற்பனை செய்யும் நிறுவனங்கள், உள்ளூர்வாசிகளுக்கு உற்பத்தி விலைக்கே தண்ணீரை விற்பனை செய்ய வேண்டும், மேலும், அந்த நிறுவனத்தை சுற்றி உள்ள விவசாயிகளுக்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீரை கட்டணமின்றி வழங்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், செயல்படுத்தாத நிறுவனங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!