Thanner pandal on behalf of AIADMK of Perambalur Union; Opening at Ammapalayam!
பெரம்பலூர் அதிமுக ஒன்றிய செயலாளர் செல்வகுமார் தலைமையில் இன்று காலை அம்மாபாளையம் கிராமத்தில் கோடைகால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
இதனை பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் திறந்து வைத்தார். முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாசலம், முன்னாள் எம்பிகள் சந்திரகாசி, மருதை ராஜா எம்ஜிஆர் மன்ற மாவட்ட பொருளாளர் எம் என் ராஜாராம், லாடபுரம் த. கருணாநிதி, கீழக்கரை பன்னீர்செல்வம், ஒன்றிய பொருளாளர் எசனை பன்னீர்செல்வம், பாப்பாங்கரை கே. ராஜா, முன்னாள் எம்எல்ஏ பூவை செழியன், மேலப்புலியூர் கவுன்சிலர் அருணா பாண்டியன், விளாமத்தூர் சிதம்பரம், சிறுவாச்சூர் முத்துசாமி, ஆலம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீசன், அம்மாபாளையம் வடிவேல், கல்பாடி முத்தமிழ்செல்வன், களரம்பட்டி வெள்ளையன் மற்றும் எசனை ஜானகி, சொக்கநாதபுரம் ராமஜெயம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அருமடல் நல்லப்பன் அம்மாபாளையம், லாடபுரம், களரம்பட்டி, மேலப்புலியூர் கிளை நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதே போல, இன்று, ஆலத்தூர் ஒன்றியம் செட்டிக்குளம் கிராமத்திலும், வேப்பூர் ஒன்றியம் குன்னம் கிராமத்திலும் அதிமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டது.