We are not enemies! We are opponents DMK-Only May Day celebrations at Perambalur district secretary RTR speech || நமக்கு எதிரிகள் நாமே அல்ல ! நமக்கு எதிரிகள் திமுக-தான் மே தின விழா தொழிற் சங்க கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.ஆர் பேசினார்
பெரம்பலூர். மே.2-
பெரம்பலூரில் நேற்றிரவு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா பொதுக்கூட்டம் அண்ணா தொழிற் சங்க மாவட்ட செயலாளர் ம.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. நகர செயலாளர் பூபதி வரவேற்றார். அ.தொ.சங்கத்தை சேர்ந்த மாவட்ட அவைத் தலைவர் அண்ணாமலை, மாவட்ட பொருளாளர் ராவணன், உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர்.
கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் துணை சபாநயகருமான வரகூர் அ.அருணாசலம், மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ஆர் (எ) ராமச்சந்திரன், பெரம்பலூர் எம்.எல்.ஏ தமிழ்ச்செல்வன், மாவட்ட துணைச் செயலாளரும், சிதம்பரம் தொகுதி எம்.பியுமான சந்திரகாசி, மாவட்ட அவைத்தலைவர் நெய்க்குப்பை இரா.துரை, உள்ளிட்ட பலர் சிறப்புரை நிகழ்த்தினர்.
ஒன்றிய செயலாளர்கள் ஆலத்தூர் கர்ணன், வேப்பந்தட்டை சிவப்பிரகாசம், வேப்பூர் கிருஷ்ணசாமி, செந்துறை சுரேஷ் மற்றும் மாவட்ட அணிச் செயலாளர்கள், மகளிர் அணிச் செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், முன்னாள் ஒன்றிய செயலாளார்கள் கண்ணுசாமி, பூவராகசாமி மற்றும், பெரம்பலூர் சர்க்கரை ஆலை, அமராவதி மொத்த விற்பனை பண்டக சாலை, கைத்தறி பிரிவு, அரசு போக்குவரத்து கழகம், ஆட்டோ சங்கம், மின்வாரியம், மாவட்ட அமைப்பு சாரா அண்ணா தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள், பெரம்பலூர் நிர்வாகிகள், பெரம்பலூர் வார்டு செயலாளர்கள், கிளை செயலாளர்கள், உள்ளிட்ட பலர் பெரும் திரளாக கலந்து கொண்டனர். அண்ணா தொழிற் சங்க மாவட்ட துணைச் செயலாளர் பசுவை. எஸ்.கோவிந்தன் நன்றி கூறினார்.
முன்னதாக பேசிய மாவட்ட செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ஆர் (எ) இராமச்சந்திரன் பேசியதாவது: நமது அம்மா (ஜெயலலிதா) சட்டமன்றத்தில், தெரிவித்ததாவது, நான் இல்லை என்றாலும், அண்ணா திமுக தொடர்ந்து இயங்கும் , அதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான உறுதியான கட்டமைப்பையும், கட்டுப்பாட்டையும், பெற்றுள்ளோம். பெரம்பலூர் மாவட்டத்தில் அம்மாவின் மறைவிற்கு பிறகு இரு வேறு அணிகளாக பிரிந்து பாதாகைள் வைத்த போது எங்கும் ஒரு சிறு சேதத்தை கூட ஏற்படுத்ததியது இல்லை. அதற்கு நினைக்கவும் இல்லை. என்ன காரணம் என்ன காரணம் என்றால் அவர்களும், அம்மா படத்தை போட்டு வைத்துள்ளனர். அவர்களும் நமது சகோதரர்கள் தான் என்பதாலேயே!! , அந்த தட்டியையோ பதாகையோ கிழித்தால் நமது அம்மாவை சேதப்படுத்திற்கு சமம் என்பதாலேயே அதை தொடும் எண்ணம் கூட வரக்கூடாது என தெரிவித்து இருந்தேன்.
இந்திய அளவில் மூன்றாவது கட்சியாக அதிமுக கட்சி வளர்ந்து வருவதால் அழிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிக்கிறது அம்மா இருந்திருந்தால் பாரத பிரதமராக ஆகியிருப்பார்.
சட்டமன்ற தேர்தலில் எந்தனையோ அலைகள் அடிக்கிறது என்றார்கள், பா.ஜ.க மோடி அலை என்றும், கருணாநிதியின் மகன் ஸ்டாலின் டாடி அலை அடிக்கிறது. என்றார்கள் ஆனால் தமிழகத்தில் லேடி அலை என தான் அம்மா நிரூபித்தார்கள்.
கட்சியில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் விரும்புவது இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும் என்பதுதான். பிரிந்து சென்ற சகோதர்கள் மீது யாரேனும் தவறான கருத்துகளையோ, சின்ன சண்டை சச்சரவு செய்து இருக்கிறோம் என யாராவதுதெரிவித்தால் நாங்கள் தவறானவர்கள், நாம் இரு அணிகளும் ஒன்று சேர வேண்டும், நமக்கு எதிரிகள் நாமே அல்ல ! நமக்கு எதிரிகள் திராவிட முன்னேற்ற கழகம்தான் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என எண்ணுகிறது.
மாற்று அணியினரும் இதற்கு ஒத்துழைப்பு நல்குவார்கள் என்பதை எதிர்பார்க்கிறோம். ஆனால், இந்த அணியில் இருப்பவர்கள் எந்த சலனத்திற்கு ஆளாகத் தேவையில்லை. ஒரு விசயத்தை உங்களுக்காக சொல்லுகிறேன், அஇதிமுக வலுவாக இருக்கும் கழகம் நம் அணிதான், நான் சொன்னது போல தமிழகமெங்கும், புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறிவித்த அண்ணா தொழிற் சங்க கூட்டத்தை தமிழகமெங்கும் நடத்தக்கூடிய அணி நமது தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் அருமை அண்ணன் வைத்திலிங்கம் தலைமையிலே இருக்க கூடியதும், நமது தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சார்ந்திருக்கின்றதும், நாம் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட இந்த அணித்தான் அம்மா அவர்களின் அம்மாவின் புகழை இன்று மே தின கூட்டமாக போட்டு , மக்கள் செல்வாக்கு, தொண்டர்கள் செல்வாக்கு மிகுந்த அணி, நமது அணிதான் என்பதை எள்ளவும் மறந்து விடக்கூடாது, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்த பெரம்பலூர் மாவட்டத்தில் கூட உங்களின் தயவோடு, உங்களின் ஒற்றுமையோடு, இந்த அணிதான் வலுவாக இருக்கிறது. எந்த சலனமும் வேண்டாம். அந்த அணி தானக வந்து நம்முடன் இணையும். அந்த சகோதரர்களையும் இணைத்து நல்லொரு ஆட்சியை தமிழகத்தில் முதலமைச்சர் தருவார்கள். நாமும் மக்கள் சேவையை திறம்பட மேம்படுத்துவோம் என பேசினார்.