“We will raise the Crown of the Police”: Tamil Nadu Milk Agents Workers Welfare Association.

தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் & மாநிலத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை :

சென்னை, செங்குன்றத்தில் வசித்து வரும் எனது சகோதரி பணிக்கு சென்று விட்டு இரவு வீடு திரும்பும் போது வீட்டிற்கு சற்று முன் சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் எனது சகோதரியின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடிவிட்டான். (இது நடந்து முடிந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்.)

இது தொடர்பாக சோழவரம் காவல்நிலையத்திற்கு புகார் அளிக்க எனது சகோதரி சென்ற போது உதவி ஆய்வாளர் புகாரை வாங்க மறுத்த தகவல் எனக்கு கிடைத்தது. உடனே நான் நேரடியாக புறப்பட்டு சோழவரம் காவல்நிலையத்திற்கு சென்று ஆய்வாளரை சந்திக்க வேண்டும் என்ற போது ஆய்விற்கு சென்று விட்டு வந்த ஆய்வாளர் அவர்களை சந்தித்து விவரத்தை கூறிய போது செங்குன்றம் பகுதியில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் குறித்து விரிவாக பேசிய அவர் எங்களது புகார் மீது வழக்குப் பதிவு செய்ய உதவி ஆய்வாளரை அழைத்து உத்தரவிட்டதோடு மட்டுமின்றி ஓரிரு நாட்களில் குற்றவாளியை கண்டு பிடித்து திருடு போன நகையையும் மீட்டுக் கொடுத்தார்.

அவர் வேறு யாருமல்ல தற்போது அயனாவரம் காவல் உதவி ஆணையராக இருக்கும் திரு. பாலமுருகன் அவர்கள் தான் அப்போது சோழவரம் காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணியில் இருந்தது.

பொதுமக்களின் புகாரினை தட்டிக் கழிக்காமல் பொறுப்புணர்ந்து செயல்பட்டு உரிய நடவடிக்கை எடுத்த திரு. பாலமுருகன் அவர்கள் காவல் ஆய்வாளராக இருந்த அவருக்கு அப்போதே நாங்கள் எங்களது நன்றியை தெரிவித்தோம்.

இந்நிலையில் சென்னை, நம்மாழ்வார்பேட்டை பகுதியில் தந்தையையும், தாயையும் இழந்து தவித்த கார்த்திக் (வயது – 15) என்கிற இளைஞனை தனது மகனாகவே பாவித்து மனிதாபிமானத்தோடு உதவ முன் வந்திருக்கும் தற்போது சென்னை, அயனாவரம் காவல் உதவி ஆணையராக இருக்கும் திரு. பாலமுருகன் அவர்களின் மனிதநேயச் செயல் கண்டு வியந்து போய் நிற்கிறோம்.

அவரது பணிகள் சிறக்கவும், அவரது குடும்பத்தினர் அனைவரும் நீண்ட ஆயுளோடும் பரிபூரண உடல்நலத்தோடும் அன்னைத் தமிழ் போலே சீரும் சிறப்போடும் பல்லாண்டு காலம் நீடுழி வாழ “தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்” சார்பிலும், லட்சக்கணக்கான பால் முகவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் குடும்பத்தினர் சார்பிலும் மனதார வாழ்த்துகிறோம்.

காவல்துறையினர் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்போருக்கு பாலமுருகன் போன்றோர் காவல்துறையினருக்கு மணிமகுடம் என்றால் அது மிகையல்ல.

தவறு செய்யும் காவல்துறையினரை மட்டும் பூதாகரமாக்கி காட்டும் நாம் இந்த சமூகத்திற்கு நல்லது செய்யும் காவல்துறையினரையும் உலகிற்கே தெரிகின்ற வகையில் உயர்த்திப் பிடிப்போம், என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!