Weakened top athletes can apply for a pension; Perambalur Collector

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2019-2020 ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையிலுள்ள பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்பூதிய உதவித் தொகை மாதம் ரூ.3,000- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு இணையதளம் www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

உதவித் தொகை பெற விரும்புபவர்கள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் சார்பாக பங்கேற்றிருக்கவேண்டும். தேசிய அளவிலான போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும், மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள், இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு சம்மேளனங்களால் நடத்தப்பட்ட சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், மத்திய அரசின் விளையாட்டு அமைச்சகம், இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்ட சர்வதேச தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள், இளவயதில் பங்கேற்ற அல்லது வெற்றி பெற்ற போட்டிகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். 01.04.2021ஆம் தேதியன்று 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6,000-த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் அல்லது மைய அரசு, மாநில அரசின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை. முதியோருக்கான (VETERAN/MASTERS SPORTS MEET) விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிப் பெற்றவா;கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதியில்லை.

ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தின் மூலம் 19.05.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும், விவரங்களுக்கு 93608 70295 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!