Welcome poster for Sasikala in Perambalur; I did not hit – AIADMK leader complained to the police.

பெரம்பலூரில் அதிமுக கட்சியை சேர்ந்த மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.என். இராசாராம். இவரது பெயரில் சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. தற்போது அரசியலில் கோஷ்டிகளாக பிரிந்த அதிமுக – அமமுக இடையே போட்டி நிலவி வரும் வேளையில், வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் சிறையில் இருந்து வருகிறார். அதனையொட்டி பெரம்பலூரில் பொதுச்செயலாளர் சசிகலாவை வரேவேற்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற பொருளாளர் எம்.என். இராசாராம் தனது ஆதரவாளர்களுடன் எஸ்.பி அலுவலகத்தில் வந்து புகார் மனு கொடுத்தார். அதில் 15 ஆண்டுகளாக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பொறுப்பில் இருக்கும் அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற நோக்கில் அவரது பெயரில் தவறாக மர்ம நபர்கள் ஒட்டியுள்ளதாகவும், அதனை ஒட்டியவர்கள், அச்சடித்தவர்கள், போஸ்டர் அடிக்க தூண்டியவர்கள் ஆகியோர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

திமுகவை விமர்சிக்கும் அதிமுகவில் 15 ஆண்டுகளாக ஒருவரே ஒரே பதவியில் நீடிப்பது என்ன ஜனநாயகம் என தற்போது கேள்வி எழுந்துள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!