Welcome to Perambalur for decorative vehicles participating in the Chennai Republic Day celebrations!
தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின்படி வ.ஊ.சி.அலங்கார ஊர்தி மற்றும் ஈ.வெ.ரா.பெரியார் அலங்கார ஊர்திகள் அரியலூர் மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டதத்திற்கு காட்சிப்படுத்த இன்று வருகை தந்தது. அலங்கார ஊர்திகளை வரவேற்பு நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள குன்னத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கலெக்டர் வெங்கடபிரியா, போலீஸ் எஸ்.பி மணி, எம்.எல்.ஏ பிரபாகரன் திமுகம மாவட்ட செயலாளர் குன்னம். சி. ராஜேந்திரன் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி மற்றும் அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் மகளிர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். அனைவரும் மலர்களை தூவி வரவேற்பளித்தனர். வரவேற்பில் காவல்துறையின் பேண்டு வாத்தியம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், இசைப்பள்ளி மாணவர்களின் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
பெரம்பலூர் 4 ரோடு பகுதியில் அலங்கார ஊர்திகளுக்கு, பொதுமக்கள் மேம்பாலத்திலிருந்து மலர்தூவி உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் குன்னம் ஒன்றியக் குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட கவுன்சிலர் கருணாநிதி, பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் செந்தமிழ்ச்செல்வி, முன்னாள் வேப்பூர் சேர்மன் அழகு. நீலமேகம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.