Welfare assistance on Karunanithi Memorial Day; Resolution at the Perambalur District Executive Committee Meeting!

File Copy

முத்தமிழறிஞர் கலைஞரின் 2ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் மாவட்ட கழக அலுவலகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கானொளி காட்சி மூலம் மாவட்ட அவைத்தலைவர் அ. நடராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார். இந்த கூட்டத்தில் மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் பா. துரைசாமி, மாநில மருத்துவரணி துனைச் செயலாளர் டாக்டர் செ. வல்லபன், மாநில வர்த்தகர் அணி துனைச் செயலாளர் வி .எஸ்.பெரியசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு. அட்சயகோபால், வழக்கறிஞர் என். ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், ந.ஜெகதீஸ்வரன், ஆர்.சிவக்குமார், பட்டுச்செல்விராஜேந்திரன், மாவட்ட துனைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், மாவட்ட பொருளாளர் செ. இரவிச்சந்திரன்,
ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அண்ணாதுரை, என்.கிருஷ்ணமூர்த்தி, எஸ்.நல்லதம்பி, வீ.ஜெகதீசன், தி.மதியழகன், சி.ராஜேந்திரன், சோ.மதியழகன், நகர செயலாளர் எம். பிரபாகரன், பேரூர் கழகச் செயலாளர்கள் எம்.வெங்கடேசன், ஆர். ரவிச்சந்திரன்,சேகர், எஸ். ஜாகிர் உசேன், ஒன்றிய பெருந்தலைவர்கள் மீனா அண்ணாதுரை, க.ராமலிங்கம், பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துனைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் டி.சி.பாஸ்கர், சோமு.மதியழகன், டாக்டர் அ.கருணாநிதி, மகாதேவி ஜெயபால், அருட்செல்வி காட்டுராசா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துனை அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கானொலி காட்சி மூலம் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தலைவரின் கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு நினைவு நாள் வருகிற ஆக.7 அன்று ஒவ்வொரு ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகள் தோறும் கலைஞரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது,

மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்ப்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க தடை இல்லை என வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கிய உயர்நீதிமன்றத்திற்கும், சட்டப் போராட்டம் நடத்திய கழகத் தலைவர் அவர்களுக்கும், கழக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் மாவட்ட தி.மு.க.சார்பிலும், கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா எம்.பி. சார்பாகவும் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறது.

மத்திய பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பலம் இருக்கின்ற காரணத்தால் புதிய கல்வி கொள்கை மூலம் மாநில உரிமைகளை பறித்து மொத்த அதிகாரத்தையும் மத்திய ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்டு மும்மொழி திட்டம் என்ற பெயரால் இந்தியை மட்டுமின்றி சமஸ்கிருதத்தையும் திணித்து இந்தியாவிலுள்ள பிற மொழிகள், பிற தேசிய இனங்கள், பண்பாட்டு கலாச்சார விழுமியங்கள் அனைத்தையும் சிதைக்கும் பேராபத்தை உருவாக்கும் மத்திய பா.ஜ.க.அரசைக் கண்டித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் அனுமதி பெற்று, கொள்கை பரப்பு செயலாளர் ஆ.இராசா எம்.பி. வழிகாட்டுதலின்படி மாபெரும் போராட்டம் நடத்துவது,

கொரோனா காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தலைமை கழக அறிவிப்பின்படி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் பாகநிலை முகவர்கள் நியமித்து வாக்காளர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் – மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் நகலை சட்டமன்ற தொகுதி வாரியாக தலைமை கட்சிக்கும் அனுப்பி வைக்க ஆகஸ்ட் 14 ம் தேதிக்குள் நியமனம் செய்யப்பட்ட பாக நிலை முகவர்களின் பட்டியலை மாவட்ட கழகத்தில் ஒப்படைக்க வேண்டும்,

2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற பொது தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதியிலும் தலைமை அறிவிக்கும் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைத்து கழகத் தலைவர் மு. க . ஸ்டாலினை முதல்வர் ஆக்க பாடுபடுவோம் என்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!