When the roof of the house near Perambalur fell, the woman’s hips and leg bones were broken!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இலுப்பைக்குடியை சேர்ந்த ரமேஷ் மனைவி சுமதி ( 30 ), இவர்களுக்கு சொந்தமான தொகுப்பு வீடு உள்ளது. அது 1989 ம் ஆண்டு கட்டப்பட்டது. இன்று மாலை சுமார் 6 மணி அளவில், வீட்டிலிருந்த போது திடீரென அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் சுமதிக்கு, இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மருவத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.