When the septic tank was dug near Perambalur the soil fell: one killed and another injured


பெரம்பலூர் மாவட்டம், அகரம்சிகூர் அருகே உள்ள வயலப்பாடி கிராமத்தில் கழிவு நீர் சேகரிப்பு தொட்டி கட்டும் போது மண் சரிந்து ஒருவர் பலியானர். மற்றொருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வயலப்பாடி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் மகன் பூபதி ( 35) வீட்டில் கழிப்பறை மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடந்து வந்தது.

கழிவு நீர் சேரிப்பு தொட்டி கட்டுவதற்காக சுமார் 10 அடி ஆழம் தோண்டப்பட்டு அதில் சுவர் எழுப்பும் பணிக்காக, தோண்ப்பட்ட குழியை சுற்றிலும் வெட்டப்பட்ட மண்ணை கொட்டி வைத்து இருந்தனர்.

கிழுமத்தூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார்கள் கொளஞ்சி ( 50) செங்கமலை (22) சங்கர் (40) மற்றும் குணசேகர் (40) ஆகிய 4 பேரும் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கொளஞ்சி, செங்கமலை ஆகிய இருவரும் குழிக்குள் இறங்கி மண்ணை அள்ளி எடுத்து கொண்டிருந்தனர் , சங்கர், குணசேகரன் இருவரும் குழியின் மேல் பகுதியில் இருந்தனர்.

அப்போது எதிர்பாராவிதமாக குழியினுள் மேலே கொட்டப்பட்ட மண் திடீரென சரிந்தது விழுந்தது . இதில் கொளஞ்சியும், செங்கமலையும் மண்ணுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் இருவரையும் மீட்கும் பணி உடடினடியாக நடந்தது. கொளஞ்சி மூச்சி திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செங்கமலை படுகாயத்துத்துடன் கால் முறிவு ஏற்பட்டு திட்டக்குடி (கடலூர்) அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொளஞ்சியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!