White Code offering at Namakkal Veterinary Medical College Students

நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரியில் மாணவர்களுக்கு ஒயிட் கோட் வழங்கும் விழா நடைபெற்றது.

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியில் பி.விஎஸ்சி பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், கால்நடைகளுக்கு சிகிச்சையை ஆரம்பிக்கும்போது அவர்களுக்கு வெள்ளை அங்கி (ஒயிட் கோட்) அணிவிப்பது வழக்கம். இந்த ஆண்டு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நாமக்கல் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் மோகன் நிகழ்ச்சிக்கு தலமை விழாவை வகித்து தொடங்கி வைத்தார்.

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் மோலாண்மைக் குழு உறுப்பினர் ஆடிட்டர் விஜயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல், டாக்டர்கள் பாலசுப்ரமணியம், செல்வராஜு, பழனிவேல், விஜயகுமார், கதிர்வேல், செல்வராஜு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். முன்னதாக பேராசிரியர் இசக்கியல் நெப்போலியன் அனைவரையும் வரவேற்றார். முடிவில் நான்காம் ஆண்டு மாணவர் விக்னேஸ்வர் நன்றி கூறினார்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!