Who visits Namakkal, has decided to give a special welcome to TTV Dinakaran, deputy general secretary of AMMK,

நாமக்கல் மாவட்டத்திற்கு வரும் 19ம் தேதி வருகை தரும் அமமுக துணைப் பொதுச்செயலாளர் தினகரனுக்கு சிறப்பான வரவேற்று அளிப்பதென்று மாவட்ட அமமுக ஆலோனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் கிழக்கு மாவட்ட அமமுக சார்பில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம் ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிழக்கு மாவட்ட அமமுக தலைவர் முன்னாள் எம்எல்ஏம் சம்பத்குமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:

வருகிற 19ம் தேதியன்று தமிழகம் முழுவதும் அமமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் நிகழ்ச்சியில் நமது கட்சியின் சார்பில் பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ப.வேலூரில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நமது கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக நடத்திடவும், நமது கட்சியைச் சேர்ந்த அனைவரும் கலந்துகொள்ளவும் கட்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட வேண்டும்.

தற்போதுள்ள தமிழக அரசு நமது கட்சி பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் சென்னை ஐகோர்ட்டில் இதற்கான அனுமதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே சசிகலாவை சின்னம்மா என்று அழைப்பதற்கு பதிலாக அம்மா என்று அழைக்க வேண்டும் என்றும் எ ன்று தற்போதைய தமிழக அமைச்சர் சி.வி சண்முகம் தெரிவித்தார். அப்படிப்பட்ட அவர் தற்போது பேசும் கருத்துக்கள் வினோதமாக உள்ளது.

திருவாரூர் தேர்தலை நடத்த தற்போது ஆளும் கட்சியாக உள்ள அதிமுக, எதிர்க்கட்சியாக உள்ள திமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளுக்கும் பயம் ஏற்பட்டுள்ளது. நமது துணைப் பொதுச்செயலாளர் தினகரன் தேர்தலை எதிர்கொள்ள தயாராக உள்ளார். இதனால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டு தேர்தலை நிறுத்தி வைத்துள்ளனர். வருகின்ற பார்லி தேர்தலில் தமிழகத்தில் காலியாக உள்ள அனைத்து எம்எல்ஏ தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படும்.

எனவே நமது கட்சி நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக தேர்தல் பணிகளை துவக்க வேண்டும். அதன் முதற்கட்டமாக அனைத்து சட்டசபை தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் தலா 30 பேர் கொண்டு பூத் கமிட்டியை அமைத்து அதன் விபரங்களை மாவட்ட செயலாளருக்கு தெரிவிக்கவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில பேரவை செயலாளர் பழனிவேல், இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், நாமக்கல் ஒன்றிய செயலாளர் வேலாயுதம் உள்ளிட்ட திரளானவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக நாமக்கல் நகர செயலாளர் ஈஸ்வரன் வரவேற்றப்பேசினார்.

Tags:

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!