Who wish to apply in lakes kutimaramattu: PWD
பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை கட்டுப்பட்டில் உள்ள ஏரிகளில் குடிமராமத்து பணிகள் செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக குரும்பலூர், அரணாரை, பெரம்பலூர், துறைமங்கலம், எழுமூர், தழுதாழை, சாத்தனவாடி, தொண்டப்பாடி, மற்றும் செஞ்சேரி ஆகிய ஒன்பது ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
குடிமராமத்து செய்ய முன்வரும் தனிநபர், நிறுவனம், விவசாயிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், ஆயக்கட்டுதாரர்களின் சங்கம் உள்ளிட்டோர் தங்களது விண்ணப்பத்தினை பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பின் உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
குடிமராமத்து செய்ய தன்னெழுச்சியாக முன்வருவோர் குடிமராமத்து பணிக்கு ஆகும் செலவில் 10 சதவீதத்தை தொகையாகவோ அல்லது உடல் உழைப்பாகவோ அளிக்கலாம் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேற்குறிப்பிடப்பட்ட ஒன்பது ஏரிகளை தவிர பிற ஏரிகளில் குடிமராமத்து பணி மேற்கொள்ள விரும்புவர்களும் தங்களது விண்ணப்பத்தினை பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளருக்கு அனுப்பிவைக்கலாம்.
இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு உதவி செயற் பொறியாளர் அலுவலகத்தை 042328-224406 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.