Why is there no G Pay in the Tasmac shop? Customer attacked employee near Perambalur!

காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் மணித்தேவன்.
பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடையில் ஜிபே இல்லையா எனக்கூறி மதுப்பிரியர் ஒருவர் விற்பனையாளரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தில், தமிழ் நாடு அரசின் டாஸ்மாக் மதுபான விற்பனை கூடம் உள்ளது. கடையின் விற்பனையாளர் மணிதேவன் என்பவர் வழக்கம்போல் விற்பனையை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது அன்னமங்கலம் மேலக்காடை சேர்ந்த இன்னாசி (37 )என்பவர் மது வாங்க வந்துள்ளார். அவர் விற்பனையாளர் மணிதேவனிடம் தன்னிடம் கையில் பணமாக இல்லை, ஜி பே -யில் பணம் செலுத்துகிறேன். மதுபாட்டில் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு விற்பனையாளர் ஜி பே வசதி இல்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இன்னாசி டாஸ்மாக் கடையில் இருந்த கண்ணாடியை உடைத்ததோடு விற்பணையாளர் மணிவேலையும் தாக்கினாராம். இதில் விற்பனையாளர் மணிதேவனுக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் டாஸ்மாக் பணியாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.