Wife appeals to Perambalur Collector to return her husband who went to work abroad!

வெளிநாட்டில் வேலைக்கு சென்று பல ஆண்டுகளாக ஊர் திரும்பாமல் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வரும் தனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்ககோரி மனைவி பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியாவிடம் மனு கொடுத்துள்ளார்.

வி.களத்தூர் அருகே உள்ள மறவந்ததம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் மனைவி பிரியா, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவிடம் கொடுத்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:

பெரம்பலூர் மாவட்டம், பழைய மறவநத்தம் கிராமத்தில் ஒரு குழந்தை, மாமியார் ஆகியோருடன் வசித்து வருகிறேன். எனது கணவர் செல்வம் சவூதி அரேபிய நாட்டுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு வேலைக்கு சென்றார். அன்று முதல் ஒரே நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இடையில் 2018 ஆம் ஆண்டு 40 நாள் விடுப்பில் சொந்த ஊர் வந்து சென்றார்.

சுமார் 10 ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் செல்வத்துக்கு ஒரே முறை மட்டுமே 40 நாட்கள் விடுப்பு கிடைத்தது. இந்நிலையில், இப்போது அவருக்கு பணிக்கேற்ற ஊதியம் வழங்குவதில்லை எனவும், தங்குமிடம் வசதி செய்து தரவில்லை எனவும், அதிகமாக வேலை வழங்குவதாகவும், சொந்த ஊருக்கு செல்ல விடுப்பு கேட்டால் வழங்க மறுப்பதாகவும் கூறுகிறார். மேலும், தன்னை சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு உரிய ஏற்பாடு செய்யுமாறு அழுது கொண்டே வீடியோ அனுப்பி உள்ளார்.

எனவே, எனது கணவரை பத்திரமாக சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!