Wildlife animals that damages crops near Perambalur: farmers request for government action!

Photo Credit: the Washington Post
பெரம்பலூர் மாவட்டத்தில், விவசாயிகள் தற்போது மானாவாரி சாகுபடியில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், நிலக்கடலை, பருத்தி, தட்டைப்பயிறு, மொச்சக்கொட்டை, பச்சைப்பயிறு, சோளம், உள்ளிட்ட வயல்களில் காட்டுப்பன்றி, மயில், மான், குரங்கு போன்ற வனவிலங்குகள் தொடர்ந்து சேதப்படுத்துவதுடன், வீணாக்கியும் வருகிறது. இதனால் விவாசயிகள் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். பல்வேறு இயற்கை வழி தடுப்பு முறைகளை கையாண்டாலும், வேலி தாண்டி வயல்களுக்குள் புகுந்து சாகுபடி பயிரை சீரழித்து வருகின்றன. பூ, காய் மற்றும் மகசூல் விளைச்சல் பருவம் முற்றி வரும் நிலையில் வனவிலங்குகள் செய்யும் சேதம், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுத்தும் என்பதால் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, வனத்துறை அதிகாரிகள் வனவிலங்குகளை பொறி வைத்துப் பிடித்து கானகத்தில் விட நடடிவடிக்கை எடுக்க வேண்டும் என எசனை, பாலையூர், பாப்பாங்கரை, அனுக்கூர், அன்னமங்கலம், வேப்பந்தட்டை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.