Wine drinkers in the temple near Namakkal public petition seeking action against
விநாயர்கோவிலில் மது அருந்திவிட்டு பொது அமைதிக்கு இடையூறு செய்யும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மலைவேப்பன்குட்டை கிராம பொதுமக்ள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம், உத்திரகிடி காவல் கிராமம், மலைவேப்பன்குட்டை பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியாமரியம், காவல் கண்காணிப்பாளர் அருளரசு ஆகியோரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
மலைவேப்பன்குட்டை கிராமத்தில் பழமையான விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் அமர்ந்துகொண்டு எங்கள் பகுதியைச் சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தினசரி மது அருந்திவிட்டு அப்பகுதியில் வருவோரிடம் வீன் வம்பு இழுத்து வருகின்றனர்.
எங்கள் ஊர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அந்த இளைஞர்களிடம் சென்று ஏன் இப்படி செய்கின்றீர்கள் என்று கேட்டால் நாங்கள் அப்படித்தான் செய்வோம் என்று கூறி சண்டைக்கு வந்தனர்.
இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கும் அந்த இளைஞர்களுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் இளைஞர்கள் வீச்சரிவாளை எடுத்து வந்து பொதுமக்களை கொலை செய்வதாக மிரட்டினார்கள்.
எனவே, மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து உரியை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.