பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு மதுவிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிருஷ்ணராஜ் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்த போது மேலமாத்தூர் பகுதியில் இன்று மகாவீர் ஜெயந்தி மது விற்க கூடாது என்ற விதியை மீறி முறைகேடாக மது விற்ற ராஜா என்பவரிடம் இருந்து 180 மில்லி அளவு கொண்ட 20 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மது விற்றவர் குன்னம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.