Wing of DMK Information Technology Meeting in Namakkal
நாமக்கலில் திமுக தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் கிழக்குமாவட்டதிமுகதகவல் தொழில்நுட்பஅணிஆலோசனைக் கூட்டம் திருச்சி ரோட்டில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டபொறுப்பாளரும்,மத்தியமுன்னாள் இணையமைச் சருமான காந்திசெல்வன் தலைமை வகித்தார்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதீர்மானங்கள்:தகவல் தொழில்நுட்பஅணிசார்பில்இன்று(16ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெறும் கருணாநிதி சிலைதிறப்புவிழாவில் பெருமளவில் பங்கேற்பது எனவும், வரும் நாடாளுமன்றதேர்தலில் திமுக மற்றும் கூட்டணிகட்சிகளின் வேட்பாளரைஅதிகப்படியானவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற தகவல் தொழில்நுட்பஅணியினர் தீவிரமாகபணியாற்றுவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் நாமக்கல் நகரபொறுப்பாளர் ராணாஆனந்த்,தலைமைசெயற்குழுஉறுப்பினர் பவித்திரம் கண்ணன், தகவல் தொழில்நுட்பஅணிமாவட்டஒருங்கிணைப்பாளர் விஸ்வநாத், தொகுதி ஒருங்கிணைப் பாளர்கள் அசோக்,பார்த்திபன் மற்றும்நகர,ஒன்றிய,பேரூராட்சி ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.