Woman arrested for setting fire to bikes of former BJP district secretary near Perambalur!
பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டியை சேர்ந்தவர் தனபால் (50), இவரது மைத்துனர் விமல்ராஜாவிற்கு, கடந்த 2 ஆண்டு வருடங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், தாத்தையார்பேட்டையை சேர்ந்த நடேசன் மகள் கோகிலா (28), என்பவரை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கோகிலா சற்று மனநலம் பாதித்திருந்ததால், இரு வீட்டார்களும் பேசி விமல்ராஜாவையும் கோகிலாவையும் பிரித்து வைத்துள்ளனர். தற்போது விமல்ராஜா வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வருகிறார்.
இதற்கு தனபால் தான் காரணம் என கருதிய கோகிலா ஈச்சம்பட்டியில் உள்ள தனபாலின் வீட்டிற்கு வந்து அவரது பைக்குகளை தீ வைத்து கொளுத்தி தெரியவந்தது. பெரம்பலூர் போலீசார் கைது செய்து கோகிலாவை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.