Woman at knife point near the 15 pounds of gold jewellery, 2.5 kg silver, car robbery near in Perambalur!
பெரம்பலூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தி முனையில் கொள்ளையர்கள் 15 பவுன் நகை மற்றும் 2.5 வெள்ளி உள்பட கார் ஒன்றையும் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை மங்கலமேடு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை கிராமம் உள்ளது. அக்கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஸ்டெல்லா (வயது 43), பெரம்பலூர் அரசுப்பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்றிரவு அவரது மகன் கார்த்திக் அருகில் தொழுதூருக்கு சென்று வருவதாக கூறி சென்றார். வீட்டில் ஸ்டெல்லா மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டிக்குள் அத்துமீறி புகுந்த மர்ம நபர்கள் இருவர் கத்தியை காட்டி மிரட்டி ஸ்டெல்லாவை கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டினர்.
கொள்ளையர்கள் பீரோவில வைக்கப்பட்டிருந்த 15 பவுன் தங்க நகை மற்றும் 2.5 கிலோ வெள்ளி மற்றும் வீட்டில் மாருதி ஆல்டோ 800 காரின் சாவியையும் எடுத்து கொள்ளையர்கள் தப்பி சென்றுவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் மங்கலமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற போலீசார் கொள்ளை நடந்த பகுதியை தடய அறிவியல் நிபுணர்களுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், கொள்ளையர்களை கொள்ளையடித்து சென்ற பொருட்களின் மதிப்பு ரூ. 4.5 லட்சம் இருக்கும் என மதிப்பிடபட்டுள்ளது.
கார் சுமார் ரூ. 3 லட்சம் என மதிப்பிடலாம். இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க மங்கலமேடு போலீசார் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.