Woman commits suicide due to lack of child near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், வரகுப்பாடி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன் (48) – சசிகலா(45), தம்பதியினர். கூலித் தொழிலாளர்களான இவர்களுக்குகடந்த 26 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்ற நிலையில், குழந்தை பேறு இல்லை என தெரிகிறது. இதன் காரணமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி குடும்பத் தகராறு இருந்து வந்த நிலையில், சசிகலா இன்று காலை 9 மணி அளவில் வீட்டில் தனியாக இருந்த போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நீண்ட நேரம் ஆகியும் வீடு திறக்காதால் சந்தேகம் அடைந்து அக்கம் பக்கத்தினர், அவரது கணவருக்கு தகவல் தெரிவித்து வீட்டை திறந்து பார்த்த போது, சசிகலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்ததுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் வரகுபாடி கிராமத்திற்கு நேரில் சென்று, சசிகலாவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை இல்லாத விரக்தியில் தூக்கு போட்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வரகுபாடி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.