Woman commits suicide in Perambalur due to childlessness; RDO Inquiry!

பெரம்பலூர் காமராஜர் வளைவு, அருகே உள்ள தனியார் குடியிருப்பில், திருமாந்துறையை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ராஜுவ்காந்தி. கார் டிரைவர். இவரது மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு, கடந்த 4 ஆண்டுகளுக்கு திருமணம் நடந்தது. குழந்தை இல்லாததால் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் சங்கீதா. சிகிச்சை பலன் தராததால் டெஸ்ட் டியூப் பேபி பெற்றுக் கொள்ள மருத்துவர் பரிந்துரைத்ததாகவும், அதனால் மன உளைச்சல் அடைந்த சங்கீதா கணவரிடம் வேறு திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்துள்ளார்.

நேற்று, ராஜீவ்காந்தி பாண்டகபாடியில் உறவினரின் கிடாவெட்டு விருந்துக்காக சென்றவர், மாலை 5 மணிக்கு பெரம்பலூர் வந்து வீட்டிற்கு செல்லாமல் கடைவீதி பகுதியில் இருந்துள்ளார். இரவு 10:15 மணிக்கு வீட்டிற்கு சென்ற போது, வெளியே உள்ள இரும்பு கேட் உள்பக்கமாக பூட்டி இருப்பதை கண்டு கேட்டை தட்டி பார்த்து கதவை திறக்காததால், போன் செய்து பார்க்க போனையும் எடுக்காததால் சந்தேகமடைந்த ராஜீவ் காந்தி இரும்பு கேட்டை ஒரு பக்கமாக உள்நோக்கி தூக்கி வைத்து விட்டு வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ஹாலில் அவரது மனைவி சங்கீதா மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு சத்தம் போடவே, அருகில் வசிப்பவர்கள் உதவியுடன் தொங்கிக் கொண்டிருந்த பெண்ணை கீழே இறக்கி, உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல், இறந்த பெண்ணின் உடலை ராஜுவ்காந்தியின் சொந்த ஊரான திருமாந்துறைக்கு எடுத்து சென்றுவிட்டனர்.

இன்று காலை, இது குறித்த தகவல் காவல்துறைக்கு தகவல் தெரிய வந்தது. அதனால் இறந்தவரின் பிரேதத்தை திருவாளந்துறையிலிருந்து பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆர்.டி.ஓ விசாரணைக்கு தெரியப்படுத்தினர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!